April 26, 2024

விஜய்க்கு மறைமுகமாக உதவி செய்யும் உதயநிதி ..!! இவர் சும்மா செய்ய மாட்டாரே ..?? பின்னால் இருக்கும் நரி தந்திரம் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய்.  இவருடைய நடிப்பில் வருகின்ற 19ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தான் லியோ . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சஞ்சய் தத் , திரிஷா , அர்ஜுன் , மிஷ்கின் , கெளதம் வாசுதேவ் மேனன் , பிரியா ஆனந்த் , சாண்டி மாஸ்டர் , மன்சூர் அலிகான் ,

போன்ற  பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . மேலும் விஜய் படம் வெளியாகிறது என்றாலே பிரச்சனைகளுக்கு பஞ்சமே இருக்காது . அப்படி லியோ படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.   இப்படி இருக்கும் நிலையில் விஜய்க்கு மறைமுகமாக உதவி,

செய்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.  அந்த வகையில் லியோ படம் ரிலீஸ் ஆகும் போது பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் வரக்கூடாது என்று போலீசாரிடம் கட்டளையிட்டிருக்கிறார் உதயநிதி.  அதுமட்டுமல்லாமல் அதையும் மீறி ரசிகர்களால் ஏதாவது பிரச்சனை வந்தால்,

அவர்களை கைது பண்ண கூடாது என்றும் கூறியிருக்கிறார் . அதோடு  லியோ படத்திற்கு அதிகாலைக் காட்சிக்கு பர்மிஷன் கொடுத்துள்ளார் முதலமைச்சர்.  இதுவும் உதயநிதி ஸ்டாலினின் வேலை தான் என்று கூறப்படுகிறது.  இப்படி இவர் மறைமுகமாக உதவி செய்வதற்கு,

முக்கிய காரணமே நடிகர் விஜய் தற்போது அரசியலில் இருந்து வருகிறார் , அதனால் அவரை எப்படியாவது தங்களுடைய கட்சி பக்கம் இழுத்து விட வேண்டும் என்றுதான் இப்படி உதவி செய்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *