May 4, 2024

22 வது திருமண நாளை ..!! ரஜினி ,கமலுடன் கொண்டாடிய ரோபோ சங்கர்- பிரியங்கா ஜோடி ..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே ..!!

ரோபோ சங்கர் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் ரோபோ சங்கர் . இப்படி சின்னத்திரையில் கலக்கிக் கொண்டு வந்த ரோபோ சங்கருக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.

அப்படி சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரோபோ சங்கருக்கு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி ,புலி, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் ,வேலைக்காரன், கலகலப்பு 2,  இரும்புத்திரை போன்ற பல திரைப்படங்களில் இவருக்கு ,

நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . இப்படி பிசியான காமெடி நடிகராக இருந்து வந்த ரோபோ சங்கருக்கு சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனது . பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்த ரோபோ சங்கர் தற்போது பழைய நிலைமைக்கு,

திரும்பி விட்டார் . இப்படி இருக்கும் நிலையில் தங்களுடைய 22 ஆவது திருமண நாளை ரஜினி மற்றும் கமலுடன் கொண்டாடியிருக்கிறார்கள்  ரோபோ சங்கர் மற்றும் அவருடைய மனைவி . தற்போது அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த ரசிகர்கள் ரோபோ சங்கர்- பிரியங்கா ஜோடிக்கு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *