April 28, 2024

சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் ஸ்பெஷல்..!! வைரலாகும் இளம் வயது புகைப்படங்கள் ..!! என்னா ஸ்டைலா இருக்காரு பாருங்க ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரம் ஆவார் . ஆரம்பத்தில் சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து வந்த ரஜினிகாந்த் இயக்குனர் பாலச்சந்தரால் கண்டுபிடிக்கப்பட்டார்.  அப்படி கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான அப்பூர்வராகங்கள் என்ற படத்தில் மூலம் தன்னுடைய  திரைப்பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் இதுவரை 169 படங்களில் நடித்து,

ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார் . குறிப்பாக 73 வயதிலும் கூட இவருக்கு என்று ஒரு தனி மார்க்கெட் இருக்கிறது . இதனாலையே இப்போதும் சூப்பர் ஸ்டாரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.  இதை அடுத்து தற்போது ,

ஜெய் பீம் பட இயக்குனரான டி ஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 170 என்ற படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் சூப்பர் ஸ்டார்.  இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த படத்தை முடித்த கையோடு லோகேஷ் ,

இயக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார் ரஜினி  . இந்நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவருடைய இளம் வயது புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *