April 26, 2024

இணையத்தை கலக்கும் ” கே பி ஒய் ” தீனாவின் திருமண புகைப்படங்கள் இதோ ..!!

சமீப காலமாக விஜய் தொலைக்காட்சியில் இருந்து தான் பல தரமான நடிகர்கள் உருவாகி வருகின்றனர் . அந்தவகையில் பல பேரை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் கே பி ஒய் தீனா .  அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் தீனா . இதன் பிறகு என்கிட்ட மோதாதே, சிரிப்புடா ,அது இது எது, பிபி ஜோடிகள் போன்ற,

பல நிகழ்ச்சிகளில் கலக்கிக் கொண்டு வந்தார்  தீனா . அதுமட்டுமில்லாமல் இவர் பண்ணும் பிரன்க் காலுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது . பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான பா பாண்டி என்ற படத்தின் மூலம்  நடிகராக அறிமுகமானார் தீனா . பின்னர் இந்த படத்தை,

தொடர்ந்து தும்பா, கைதி ,மாஸ்டர் ,புலிக்குத்தி பாண்டி, அன்பறிவு போன்ற பல திரைப்படங்களில் துணை வேடங்களிலும் காமெடி வேடங்களிலும்  நடித்திருந்தார் தீனா .  இப்படி சின்னத்திரை வெள்ளித்திரை என்று மாறி மாறி கலக்கி கொண்டு வந்த தீனா ,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இப்படி இருக்கும் நிலையில் அவருடைய திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது  . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *