April 26, 2024

முதல்வர் தலைமையில் நடந்த ” விஜய் சேதுபதி ” பட நடிகரின் திருமணம் ..!! இவர் இந்த பிரபலத்தின் மகனா ..?? வைரலாகும் திருமண புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமாவில் நடிகர்களை தாண்டி துணை நடிகர்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர்.  அப்படி கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் ராஜ்குமார்.  இந்த படத்தில் தன்னுடைய நகைச்சுவையான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகர் ராஜ்குமார்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நவீன சரஸ்வதி சபதம்,  சீதக்காதி ,விக்ரம் வேதா , என் ஜி கே , துக்ளக் தர்பார் , விருமன் போன்ற பல திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து பிரபலமானார்   நடிகர் ராஜ்குமார் . இப்படி நடிகராக பார்த்த ராஜ்குமார் பிரபலத்தின் மகன்,

என்பது அனைவருக்கும் தெரியாத ஒன்று . அந்த வகையில் திமுக கட்சியின் பிரமுகரான மதுரை திருமங்கலம் கோபாலின் கடைசி மகன் தான் நடிகர்  ராஜ்குமார் . இந்நிலையில் இவருடைய திருமணம் இன்று கோலாகலமாக நடந்திருக்கிறது.  அவருடைய திருமணத்திற்கு அமைச்சர்களுடன்,

நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் . தற்போது அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில்  வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் ராஜ்குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *