April 26, 2024

பணமே இல்லை என்று உதவி கேட்ட “பிக்பாஸ்” அமீர் ..!! அப்ப, இதுக்கு மட்டும் எப்படி காசு வந்தது ..?? கழுவி ஊத்தும் ரசிகர்கள் ..!!

ஒவ்வொரு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும்  ஒவ்வொரு காதல் ஜோடிகள் மலருவார்கள்.  அப்படி பிக் பாஸ் சீசன் 5 ல்  மலர்ந்த காதல் ஜோடிகள் தான் அமீர் மற்றும் பாவனி.  இதில் பாவனி  தமிழில் ஒளிப்பரப்பான பல சீரியல்களில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சியமானவர்.  அமீர் ஓர் நடன கலைஞர் ஆவார். இப்படி பிக் பாஸ் வீட்டிற்குள் இருவரும் காதலித்து வந்த நிலையில் வெளியே வந்ததும் திருமணம் செய்யாமல் ,

இன்னும் காதலித்து தான் வருகிறார்கள் . குறிப்பாக எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக தான் சென்று வருகின்றனர் . அது மட்டுமில்லாமல் தற்போது இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  இப்படி இருக்கும் நிலையில் ,

சமீபத்தில் தான் இரண்டு மாணவர்களை படிக்க வைத்து வருவதாகவும்,  தற்போது தன்னிடம் போதுமான பணம் இல்லாததால் யாராவது அந்த இரண்டு மாணவர்களுக்கு உதவுங்கள் என்று உதவி கேட்டிருந்தார் அமீர் . ஆனால் இப்படி அன்று காசு இல்லை என்று புலம்பிய அமீர் ,

தற்போது பதினைந்து லட்சம் ரூபாயில் கார் ஒன்றை வாங்கி இருக்கிறார் . அது மட்டுமல்லாமல் தன்னுடைய காதலியுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலாவும் சென்று இருக்கிறார் அமீர்.  அங்கு ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு மட்டும் 2 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக,

அமீரே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதைப் பார்த்த ரசிகர்கள் மாணவர்களுக்கு செலவு செய்ய காசு இல்லை , ஆனா இதுக்கு மட்டும் காசு இருக்கா என்று கழுவி ஊற்றி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *