April 28, 2024

ஹனிமூனுக்காக வெளிநாட்டுக்கு பறந்த கெளதம்- மஞ்சிமா ஜோடி ..!! வெளிவந்த ரொமான்டிக் புகைப்படங்கள் ..!!

கௌதம் கார்த்திக் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.  நவரச நாயகன்  கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன் , இவன் தந்திரன் ,

தேவராட்டம் , பத்து தல  போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் கௌதம் கார்த்திக்.  இதனிடையே தேவராட்டம் படத்தில் நடிக்கும் போது நடிகை  மஞ்சிமா மோகன் மீது காதல் வயப்பட்டார் நடிகர் கௌதம் கார்த்திக் . இதன் பிறகு பல வருடங்களாக இருவரும் ,

காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் இருவரும் பெற்றோர்கள்  சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.  திருமணத்துக்கு பிறகு பல படங்களில் பிஸியாக நடித்துகொண்டு வருகிறார் நடிகர் கெளதம் கார்த்திக் . இப்படி இருக்கும் நிலையில் கல்யாணமாகி 9 மாதங்கள்,

கழித்து இருவரும் ஹனிமூன் சென்றுள்ளனர் . தற்போது அந்த ரொமான்டிக் புகைப்படங்களை கௌதம் கார்த்திக் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *