May 6, 2024

இது தான் எங்களுடைய அழகிய குடும்பம் ..!! புகைப்படத்தை வெளியிட்ட ” ராஜா ராணி ” சீரியல் ஆல்யா மானசா..!! இதோ நீங்களும் பாருங்க ..!!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான சூப்பர் ஹிட் சீரியல் தான் ராஜா ராணி . இந்த இந்த சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா. இந்த சீரியலில் செம்பருத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகை ஆல்யா மானசா . இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிகர் சஞ்சீவ் நடித்திருந்தார் . இவர் தமிழில் வெளியான,

குளிர் 100 டிகிரி, நீயும் நானும், குறும்புக்கார பசங்க, ஆங்கில படம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் . இருந்தாலும் இவருக்கு சீரியல் தான் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அந்த வகையில் ராஜா ராணி சீரியலை தொடர்ந்து காற்றின் மொழி , கயல் ,  பிரியமான தோழி ,

போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார் . இதனிடையே ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போது இவருக்கும் ஆல்யா மானசாவுக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது . பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் .

திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக தன்னுடைய குடும்பப் புகைப்படங்களை சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஆலியா மானசா.  இதோ அந்த புகைப்படங்களை நீங்கள் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *