May 14, 2024

44 வது பிறந்தநாளில் ..!! அஜித்துடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்த ஷாலினி ..!! 23 வருடமாகியும் குறையாத காதல் ..!!

90 களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஷாலினி . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஷாலினி கடந்த 1997 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அமர்க்களம் ,கண்ணுக்குள் நிலவு ,அலைபாயுதே ,பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை ஷாலினி . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே அஜித்துடன் காதல் வயப்பட்டார்  நடிகை ஷாலினி.  பின்னர் கடந்த 2000 ம் ஆண்டு ,

இருவரும்  திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர் . குறிப்பாக திருமணத்துக்கு பிறகு நடிப்பதையே முற்றிலும் நிறுத்திக் கொண்டார் நடிகை ஷாலினி . இப்படி இருக்கும் நிலையில் நேற்று தன்னுடைய 44 வது பிறந்த நாளை,

கொண்டாடியிருந்தார் நடிகை ஷாலினி . இந்நிலையில் 44 வது பிறந்த நாளை முன்னிட்டு அஜித்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ஷாலினி . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *