May 6, 2024

விஜய் சார் அரசியலுக்கு வரமாட்டாரு ..!! அடிச்சு சொல்லும் இயக்குனர் மோகன் ஜி ..!! என்ன காரணம் தெரியுமா ..?? வைரலாகும் வீடியோ பதிவு இதோ ..!!

தமிழ் சினிமா உலகில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருபவர் நடிகர் விஜய்.  இன்னும் சொல்லப்போனால் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடத்தில் நடிகர் விஜய் தான் இருந்து வருகிறார் . இதனாலேயே இவருக்கும் கோடிக்கணக்கில் ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அதற்கான வேலைப்பாடுகளை இப்போதே செய்து கொண்டு வருகிறார் நடிகர் விஜய் . அந்த வகையில் சமீபத்தில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்க தொகை வழங்கி இருந்தார் .  அது மட்டுமல்லாமல் லியோ படத்தின் வெற்றி விழாவின் போது,

” 2026 ல் கப்பு முக்கியம் பிகிலு ” என்று மறைமுகமாக சொல்லி இருந்தார் நடிகர் விஜய்.  இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்று கூறியுள்ளார் பிரபல இயக்குனர் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை இயக்குனர் மோகன் ஜி தான் . திரௌபதி, ருத்ர தாண்டவம்,

போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரபலமான மோகன் ஜி பேட்டி ஒன்றில் கூறியதாவது, ஒரு நடிகராக விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர மாட்டார் . மேலும் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வருகிறார் விஜய் . அதனால் அவர் அந்த இடத்தை விட்டுவிட்டு,

இன்னொரு இடத்திற்கு செல்ல மாட்டார் . அப்படியே அவர் வந்தாலும் அவர் தேர்ந்தெடுப்பவர்கள் தான் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று கூறியிருந்தார்.  தற்போது அவர் பேசிய வீடியோ  சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *