April 22, 2024

எனக்கு குடும்பம் தான் முக்கியம் ..!! மகனின் பள்ளிக்கே சென்று அனைவரையும் உற்சாகப்படுத்திய அஜித் ..!! வைரலாகும் புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்குமார் . அமராவதி என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கிய அஜித் பல வருட போராட்டத்திற்கு பிறகு முன்னணி நடிகர் என்று அந்தஸ்தை பெற்றார்.  மேலும் அஜித் கடந்த சில வருடங்களாகவே பேட்டிகள் கொடுப்பதையும் , பொது மேடைகளில் கலந்து கொள்வதையும் தவிர்த்து கொண்டு வருகிறார் .

இன்னும் சொல்ல போனால் அவருடைய வாழ்க்கையை அவர் நன்றாக வாழ்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.  அந்த வகையில் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்துக்கொண்டு வரும் அஜித் ,

அடுத்த அடுத்த படங்களில் கமிட்டாகி உள்ளார் . என்னதான் அஜித் படங்களில் பிஸியாக இருந்தாலும் அவ்வபோது தன்னுடைய குடும்பத்திற்கு நேரத்தை செலவிட்டு தான் வருகிறார் . அந்த வகையில் அஜித்தின் மகனான ஆத்விக் கால்பந்தாட்டத்தில் கலக்கிக் கொண்டு வருகிறார்.

அப்படி தன்னுடைய மகனை ஊக்குவிக்கும் வகையில் அந்த கிரவுண்டிற்கு சென்றது மட்டுமல்லாமல் மகனையும் , சக மாணவர்களையும் உற்சாகப்படுத்தி இருக்கிறார் அஜித் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *