April 26, 2024

காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய பெற்றோர்கள் ..!! ” திருமகள் ” சீரியல் நடிகையை கரம்பிடித்த ” சுந்தரி ” சீரியல் நடிகர் ..!! வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படங்கள் ..!!

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் சுந்தரி சீரியல்.  கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியலில் கேப்ரில்லா, கிருஷ்ணா ரகுநாதன், ஸ்ரீ கோபிகா போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.  இந்த சீரியலில் கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகர் அரவிஷ் குமார் . தென்றல் சீரியல் மூலம் அறிமுகமான,

அரவிஷ் குமார் பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து பாசமலர் , சின்னத்தம்பி , மின்னலே , தெய்வமகள் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் அரவிஷ் குமாரும் , சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணி , திருமகள் போன்ற சீரியல்களில் ,

நடித்து பிரபலமான ஹரிதாவும் சமீப காலமாக காதலித்து வந்துள்ளனர்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்துள்ளது.  குறிப்பாக சீரியல் ஜோடிகளான செந்தில்- ஸ்ரீஜா ,ஆலியா மானசா-  சஞ்சீவ் , சித்து- ஸ்ரேயா,

போன்ற ஜோடிகளின் வரிசையில் இவர்களும் இணைந்துள்ளனர்.  தற்போது இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதோ அந்த   புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *