May 6, 2024

அப்பா , அண்ணன் , அண்ணி ..!! விஷாலின் குடும்பமே சினிமா குடும்பமா ..?? முதல் முறையாக வெளியான குடும்ப புகைப்படங்கள் ..!!

விஷால் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே என்ற படத்தின்  மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விஷால் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்ததுஎன்று தான் சொல்ல வேண்டும் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சண்டக்கோழி ,திமிரு , தாமிரபரணி போன்ற,

பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் விஷால். ஆனால் இதன் பிறகு இவர் நடித்த திரைப்படங்களில் ஒரு சில படங்கள் தான் வெற்றியை சந்தித்தது . ஆனால் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி,

இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . மேலும் 46 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் விஷாலின் குடும்பமே சினிமா குடும்பம் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று . அந்த வகையில் விஷாலின் அப்பாவான ஜி கே ரெட்டி ஓர் தயாரிப்பாளர் ஆவார்.

இவரைத் தொடர்ந்து விஷாலின் அண்ணனான விக்ரம் கிருஷ்ணா ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . அதோடு விஷாலின் அண்ணியான ஷ்ரியா ரெட்டியும் ஒரு நடிகை ஆவார். இந்நிலையில்  நடிகர் விஷாலின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *