May 4, 2024

ஒரே படத்தில் இணையும் ரஜினி , கமல் ..!! 38 வருடங்கள் பிறகு நடக்கப்போகும் தரமான சம்பவம் ..!! இயக்குனர் யார் தெரியுமா ..?? அப்ப ஸ்க்ரீன் கிழியறது கன்பார்ம் ..!!

தமிழ் சினிமாவில் காலம் காலமாக இரு துருவ நட்சத்திரப்போட்டி நடந்து கொண்டு தான் வருகிறது.  அந்த வகையில் எம்ஜிஆர் -சிவாஜி தொடர்ந்து தற்போது இருக்கும் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி வரை பல பேரை கூறலாம்.  அதில் ஒருவர் தான் ரஜினி- கமல் . ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் இணைந்து அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள் ,16 வயதினிலே, ஆடுபுலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது ,

தப்பு தாளங்கள் ,அவள் அப்படித்தான் ,அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்ற பல திரைப்படங்களில் ரஜினியும், கமலும் ஒன்றாக நடித்திருந்தனர்.  இதன் பிறகு ஒரு கட்டத்தில் இருவரும் தங்களுக்கு உண்டான பாணியில் கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தனர்.

இப்படி இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 38 வருடங்களுக்குப் பிறகு கமலும் , ரஜினியும் ஒரே படத்தில் நடிக்க உள்ளார்களாம் . அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளார் . ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ,

எல் சி யு என்ற யுனிவர்சில் தன்னுடைய எல்லா படத்திலும் எல்லா நடிகர்களையும் இணைத்துக் கொண்டு வருகிறார்.  அந்த வகையில் லியோ படத்தில் கூட விக்ரம் கமல்ஹாசன் இடம்பெற்று இருந்தார் . இதனால் கண்டிப்பாக அடுத்த படத்தில் கமலுக்கும் ஒரு சிறப்பு வேடம்,

வைத்திருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.  அப்படி இந்த படத்தில் ஏழு நிமிட காட்சியில் நடிக்க இருக்கிறாராம் கமல்ஹாசன் . இதனால் ரசிகர்கள் உச்சகட்ட கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *