April 29, 2024

தீபாவளி வின்னர் யார் ..?? கார்த்தியா ..?? லாரன்ஸா ..?? விக்ரம் பிரபுவா ..?? முதல் நாளிலேயே புட்டு புட்டு வைத்த ரசிகர்கள் ..!! அப்ப இந்த தீபாவளி இவரோட தீபாவளி தானா ..??

இந்த தீபாவளி பண்டிகைக்கு கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும், ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா 2  திரைப்படமும் , விக்ரம் பிரபுவின் ரெய்டு திரைப்படமும் வெளியானது.  இதில் கார்த்தி நடிப்பில் உருவான ஜப்பான் படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்கு இருந்தார். இந்தப் படத்தில் கார்த்தி உடன் இணைந்து அனு இமானுவேல் ,ஜித்தன் ரமேஷ், கேஎஸ் ரவிக்குமார் ,சுனில், விஜய் மில்டன் ,வாகை சந்திரசேகர் ,

போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் தற்போது மோசமான வரவேற்பையே பெற்று வருகிறது . குறிப்பாக ரசிகர்கள் ஜப்பான் படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர் . இதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான,

ஜிகர்தண்டா 2 படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார் . இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சைன் டாம் சாக்கோ ,நிமீசா சஜயன் ,நவீன் சந்திரா, சத்யன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இப்படி வெளியான திரைப்படம்,

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும் . இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் தன்னுடைய தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  இதைத்தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ரெய்டு திரைப்படமும்,

நல்ல வரவேற்பை தான் பெற்று வருகிறது . இருந்தாலும் வசூல் ரீதியாக பார்த்தால் ஜிகர்தண்டா 2 திரைப்படம் தான் தீபாவளி வின்னராக அமையும் என்று கூறப்படுகிறது.  இதனால் இந்த தீபாவளி ராகவா லாரன்ஸின்  தீபாவளி என்று தான் சொல்ல வேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *