April 28, 2024

குஷ்பூ வீட்டில் தீபாவளியா ..?? இல்ல திருவிழாவா..?? வீடு முழுக்க ஒரே சீரியலா இருக்கு ..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே ..!!

90 களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை குஷ்பூ.  ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கி கொண்டு வந்த குஷ்பூ கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.  இப்படி அறிமுகமான குறிப்பிட்ட காலகட்டத்திலேயே பல முன்னணி நடிகைகளுடன் நடித்து,

தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் நடிகை குஷ்பூ.  இன்னும் சொல்லப்போனால் அப்போது குஷ்பூவின் அழகில் தமிழ் ரசிகர்கள் மயங்கி கிடந்தனர்.  மேலும் நடிகை குஷ்பூ தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி,

படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே இயக்குனரும் நடிகருமான சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை குஷ்பூ . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வந்த குஷ்பூ ,

தற்போது அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தன்னுடைய வீடு முழுக்க வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்துள்ளார் நடிகை குஷ்பூ . இதை பார்த்த ரசிகர்கள் குஷ்பூ வீட்டில் தீபாவளியா இல்ல திருவிழாவா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *