May 2, 2024

கமலுக்கே ஜோடியாகும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் “அவ்வை சண்முகி ” பட சிறுமி ..!! லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அவ்வை சண்முகி . ஹாலிவுட் படத்தின் ரீ மேக்கான அவ்வை சண்முகி படத்தில் பாண்டியன் மற்றும் அவ்வை சண்முகி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகர் கமல்ஹாசன் . குறிப்பாக அவ்வை சண்முகி ,

கதாபாத்திரத்தில் ஒரு பெண் போலவே வாழ்ந்து இருந்தார் கமல்ஹாசன் என்றுதான் சொல்ல வேண்டும் . மேலும் இந்த படத்தில் கமலுடன் இணைந்து மீனா ,ஜெமினி கணேசன் ,நாகேஷ் ,மணிவண்ணன், நாசர், டெல்லி கணேஷ் , ஹீரா போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்தவர் தான் அன்னி . இந்த படத்தில் இவரும் கமலுக்கு நிஜமகள் போலவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் மூன்று வயதிலேயே சினிமாவிற்குள் வந்த அன்னி சினிமா படங்கள், சீரியல்,   விளம்பர படங்கள் என்று பலவற்றில்,

நடித்திருக்கிறார் . இதன் பிறகு ஒரு கட்டத்தில் என்ன ஆனார் எங்கு உள்ளார் என்று தெரியாத அளவிற்கு இருந்து வந்தார் அன்னி . இப்படி இருக்கும் நிலையில் தற்போது கமலுக்கே ஜோடியாகும் அளவிற்கு பெரிய பெண்ணாக வளர்ந்து நிற்கிறார் அன்னி . அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள்,

தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் அவ்வை சண்முகி படத்தில் நடித்த சிறுமியா இது .? ஹீரோயின் கணக்கா வளர்ந்து விட்டாரே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *