April 28, 2024

” பிக்பாஸ் ” விசித்ராவை ரூமுக்கு அழைத்த டாப் நடிகர் ..!! மோசமான அனுபவத்தை பகிர்ந்த நடிகை ..!! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க ..!!

விசித்ரா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார். கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான போர் கொடி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் விசித்ரா.  இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது தலைவாசல் படத்தின் மூலம் தான்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தேவர்மகன், அமராவதி ,ராவணன், வண்டி சோலை சின்ராசு, அமைதிப்படை ,முத்து ,வில்லாதி வில்லன்,

ரகசிய போலீஸ், பெரிய குடும்பம் ,எட்டுப்பட்டி ராசா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகை விசித்ரா . பின்னர் திருமணமான பிறகு நடிப்பதை நிறுத்திய விசித்ரா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில்  பிக் பாஸ் வீட்டில் தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்திருந்தார் விசித்ரா . அதில் , ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது அந்த படத்தின் ஹீரோ என்னை அவருடைய ரூமுக்கு வர சொல்லி அழைத்தார்.  ஆனால் நான் போகவில்லை . அதன் பிறகு தான் என்னை எல்லோரும்,

டார்கெட் செய்ய ஆரம்பித்தார்கள் . அப்படி படப்பிடிப்பில்  ஒருவர் தவறான முறையில் என்னை தடவினார்.  உடனே அவரை அழைத்துக்கொண்டு படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரிடம் கூறினேன்.  ஆனால் அவர் என்னுடைய கன்னத்திலேயே பளார் என்று அறைந்து விட்டார் . அந்த நேரத்தில் எனக்கு யாருமே உதவி செய்யவில்லை,

என்று கண்கலங்கி பேசியிருந்தார் விசித்ரா.  இந்நிலையில் விசித்ராவை ரூமுக்கு அழைத்த அந்த டாப் நடிகர் தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா தானாம். தற்போது அதை கண்டுபிடித்த ரசிகர்கள் தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணாவை கழுவி ஊற்றி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *