April 24, 2024

ஐயா அப்துல் கலாமும் , நடிகர் விவேக்கும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ..!! இறந்தாலும் மரமாக நிற்கிறது இவர்கள் போட்ட விதைகள் ..!!

தமிழ் சினிமா உலகை கலக்கிக் கொண்டு வந்த பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தவர் தான் மறைந்த காமெடி நடிகர் விவேக் அவர்கள் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விவேக் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தார்.  இன்னும் சொல்லப்போனால் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய காமெடி காட்சிகள் மூலம் ,

தமிழ் மக்களுக்கு பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தார் விவேக். இதனாலையே “ஜனங்களின் கலைஞன்” , சின்ன கலைவாணர்  என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்தார் விவேக் . இப்படி பல கோடி ரசிகர்களின்  ஃபேவரைட் காமெடியனாக இருந்து வந்த விவேக்,

அப்துல் கலாம் ஐயாவுக்கும் மிகவும் பிடித்த காமெடி நடிகராம் . குறிப்பாக இருவரும் பேட்டி ஒன்றில் பேசும் போது,  அப்துல் கலாம் ஐயா ஒரு கோடி மரம் நடுங்கள் என்று சொல்லிய ஒரே காரணத்திற்காக இறப்பதற்கு முன்பு வரை பல மரங்களை நட்டார்  நடிகர் விவேக் .

அப்படி அவர் இறக்கும்போது 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நற்று இருந்தார்.  இப்படி இருக்கும் நிலையில் ஐயா அப்துல் கலாமும்,  நடிகர் விவேக்கும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *