April 30, 2024

பல ரும் பா ர்த் திடாத நடி கர் ” ஜி த்தன் ” ரமே ஷின் குடு ம்ப புகை ப்ப டங்கள் உ ள் ளே ..!!

ஜித்தன் ரமேஷ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.  பிரபல முன்னணி தயாரிப்பாளரான ஆர் பி சௌத்ரியின் மகனும் , நடிகர் ஜீவாவின் அண்ணனும் ஆவார் நடிகர் ஜித்தன் ரமேஷ் .  தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ரமேஷ் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ஜித்தன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.

இப்படி வெளியான திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . இந்த படத்திற்கு பிறகு தான் ஜித்தன் ரமேஷ் என்று அழைக்கப்பட்டார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மது, நீ வேணும்டா செல்லம் ,மதுரை வீரன், புலி வருது ,ஒஸ்தி ,ஜித்தன் 2 ,

போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் ஜித்தன் ரமேஷ் . இருந்தாலும் இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு வெளியேறினார் நடிகர் ஜித்தன் ரமேஷ்.  மேலும் இவர் தமிழ் மொழி,

மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .  கடைசியாக தமிழில் வெளியான பர்ஹானா என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகர் ஜித்தன் ரமேஷ். இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2006 ஆம் ஆண்டு,

ஷில்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஜித்தன் ரமேஷ்.  திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத நடிகர் ஜித்தன் ரமேஷின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *