April 29, 2024

அதே டைலர் , அதே வாடகை..!! லியோ வெற்றி விழாவுக்கு..!! நயன்தாராவின் கல்யாண சேலையை அணிந்து வந்த திரிஷா ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை 40 வயதை கடந்தும்  கூட இன்னும் அதே அழகில் ரசிகர்களை மயக்கிக்கொண்டு வருகிறார் நடிகை திரிஷா.  சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் தமிழ் திரை பயணத்தை தொடங்கிய  நடிகை திரிஷா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் . குறிப்பாக தமிழ் சினிமாவை கலக்கிவரும் ரஜினி , கமல் , விஜய் ,

அஜித் , சூர்யா , விக்ரம் , தனுஷ் , சிம்பு போன்ற பல நடிகர்களுடன் ஜோடி போட்டு பிரபலமானார் நடிகை திரிஷா . பின்னர் இடையில் கொஞ்சம் சறுக்கிய  நடிகை திரிஷாவுக்கு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை,

ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும் . இதைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை திரிஷா . அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திலும்,

நடித்திருந்தார் நடிகை திரிஷா.  இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.  அந்த விழாவில் நயன்தாரா தன்னுடைய திருமணத்தில் அணிந்திருந்த சேலை போலவே அணிந்து வந்திருந்தார் நடிகை திரிஷா .

இதைப் பார்த்த ரசிகர்கள் அதே டைலர் , அதே வாடகை என்று கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *