April 28, 2024

ஜீவாவுக்கு ஜோடியான டிஜிபியின் மகள் ..!! இயக்குனர் யார் தெரியுமா ..?? அப்ப படம் சூப்பர் ஹிட் தான் ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜீவா . ஒரு காலகட்டத்தில் இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் நல்ல விமர்சனங்களையே பெற்றது . ஆனால் சமீப காலமாக இவர் நடித்த எந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை . இதனால் அடுத்து ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார் ஜீவா.  அந்த வகையில் அடுத்ததாக,

டாடா என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம் ஜீவா . இந்த படத்தில் தமிழ்நாட்டு காவல்துறை உயர் அதிகாரியான டிஜிபி சங்கரின் மகளான தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம்.

இதை பார்த்த ரசிகர்கள் அப்ப படம் சூப்பர் ஹிட் தான் என்று கூறி வருகின்றனர். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *