April 28, 2024

இன்னும் 500 கோடியை கூட தொடாத லியோ ..!! 10 நாள் வசூல் இவ்வளவு தானா ..?? நாளுக்கு நாள் மந்தமாகும் லியோ வசூல் ..!!

தற்போது நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையிலேயே அதிக வசூல் செய்த படமாக அமைந்துள்ளது லியோ திரைப்படம் . அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-  விஜய் கூட்டணியில் உருவான இந்த படத்தில் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மடோனா செபாஸ்டின், பாபு ஆண்டனி போன்ற ,

பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் . இந்த படத்திற்கு அனிருத் வெறித்தனமாக இசையமைத்திருந்தார்.  இன்னும் சொல்லப்போனால் இந்த படத்திற்கு அனிருத்தின் இசையும் பலம் சேர்த்தது என்று தான் சொல்ல வேண்டும் . மேலும் இப்படி வெளியான திரைப்படம் ஹாலிவுட் படம் ,

போல இருந்தாலும்  கலவையான வசனங்களையே பெற்றது . அப்படி இருந்தும் கூட வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்து வருகிறது லியோ திரைப்படம்.  அந்த வகையில் வெறும் ஏழு நாட்களில் இந்த திரைப்படம் 461 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக,

அறிவித்து இருந்தது . இப்படி  இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் பத்தாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் இந்த திரைப்படம் 10 நாட்களில் 475 கோடி வசூல் செய்துள்ளதாம். இதனால் இனிவரும் நாட்களில் லியோ படத்தின் வசூல் மந்தமாக தான் இருக்கும்,

என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது . இதைப் பார்த்த பலரும் இன்னும் லியோ திரைப்படம் 500 கோடியை கூட தொடவில்லையா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *