May 5, 2024

33 வருடங்கள் கழித்து ..!! என்னுடைய குருவுடன் நடிக்கிறேன் ..!! சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் சூப்பர் ஸ்டார் ..!! யாருன்னு நீங்களே பாருங்க ..!!

ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றி தொடர்ந்து அடுத்ததாக ஜெய் பீம் பட இயக்குனரான டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 170 என்ற படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து பகத் பாசில்,  ராணா டகுபதி , மஞ்சு வாரியர்,  துசரா விஜயன் ,ரித்திகா சிங் போன்ற பல பிரபலங்கள் நடித்துக் கொண்டு வருகின்றனர் .

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் . இந்த படமும் ஒரு முக்கியமான கருத்தை மையமாக கொண்டுதான் உருவாகி வருகிறதாம் . இந்நிலையில் 33 வருடங்களுக்குப் பிறகு என்னுடைய குருவுடன் மீண்டும் நடிக்கிறேன் என்று,

சந்தோசத்தில் துள்ளிக் குதித்து இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  அவர் வேறு யாருமில்லை பிரபல ஹிந்தி நடிகரான அமிதாப்பச்சன் தான்.  ஹிந்தி சினிமா உலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வந்த அமிதாப்பச்சன் உடன்,

இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த் . அப்படி கடைசியாக கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ஹம் என்ற படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர்.  அதன் பிறகு தற்போது தலைவர் 170 படத்தில் இணைந்துள்ளார்  நடிகர் அமிதாப் பச்சன்.

இந்த நல்ல செய்தியை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமாக பதிவு போட்டிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இதோ அந்தப் பதிவை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *