April 29, 2024

இந்த குழந்தைக்கு தெரியாது ..!! வருங்காலத்தில் பெரிய நடிகையா வருவோம்னு ..!! யார் அந்த தமிழ் நடிகைன்னு நீங்களே பாருங்க ..!!

மஞ்சிமா மோகன் ஓர் பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார். ஆரம்பத்தில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக் கொண்டு வந்தார் நடிகை மஞ்சிமா மோகன் . பின்னர் மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான மஞ்சிமா மோகன் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான,

அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் நடிகை மஞ்சிமா மோகன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சத்ரியன் ,

இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம் ,துக்ளக் தர்பார் ,எஃப் ஐ ஆர் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை மஞ்சிமா மோகன் . அப்படி தேவராட்டம் படத்தில் நடிக்கும் போது அந்தப் படத்தின் ஹீரோவான கௌதம் கார்த்திக்கும்  இவருக்கும் இடையே,

காதல் ஏற்பட்டது. பின்னர்  பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த வருடம் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் . இப்படி இருக்கும் நிலையில் மஞ்சிமா மோகன் குழந்தையாக இருக்கும் போது அவருடைய அம்மாவுடன் எடுத்துக் கொண்ட,

புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் அட நடிகை மஞ்சிமா மோகனா இது.?  சிறு வயதில் செம க்யூட்டாக இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *