April 26, 2024

கிறிஸ்டியனாக பிறந்து ..!! திடீரென ஹிந்துவாக மாறிய நடிகர் லிவிங்ஸ்டன்..!! காரணத்தை கேட்டு கழுவி ஊத்தும் ரசிகர்கள் ..!!

லிவிங்ஸ்டன் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ,காமெடியன் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார்.  ஆரம்பத்தில் திரைக்கதை எழுத்தாளராக இருந்து வந்த லிவிங்ஸ்டன் பூந்தோட்ட காவல்காரன் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த லிவிங்ஸ்டன் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான சுந்தர புருஷன் என்ற படத்தின் மூலம்,

ஹீரோவாக அறிமுகமானார் . இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து சொல்லாமலே, விரலுக்கு ஏத்த வீக்கம் ,என் புருஷன் குழந்தை மாதிரி போன்ற பல திரைப்படங்களில் நடித்த தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

பின்னர் காமெடி வேடங்களிலும்,  குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தி வந்தார் நடிகர் லிவிங்ஸ்டன் . இப்படி வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டு வந்த லிவிங்ஸ்டன் சின்னத்திரையில் ஒளிப்பரப்பான கண்ணான கண்ணே ,பூவே பூச்சூடவா போன்ற செயல்களிலும் நடித்திருக்கிறார்.

இதனிடையே ஜெசி என்பவரை திருமணம் செய்து கொண்ட லிவிங்ஸ்டனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  இந்நிலையில் பிறப்பால் ஒரு கிறிஸ்டியனாக பிறந்த லிவிங்ஸ்டன் தற்போது இந்து மதத்திற்கு மாற உள்ளாராம் . அதற்கான காரணம் என்னவென்றால் அவருக்கு ,

கிறிஸ்டியனாக இருந்து போர் அடித்து விட்டதாம் . இதனால் தான் இந்துவாக மாறிவிட்டாராம்.  அதனால் இனிமேல் இவர் கிருஷ்ணருடைய பக்தராக போவதாகவும் கூறியிருந்தார்.  இதைப் பார்த்த ரசிகர்கள் லிவிங்ஸ்டனின் முடிவுக்கு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *