May 2, 2024

தொகுப்பாளினி டிடிக்கு மாப்பிள்ளை ரெடி ..!! விரைவில் இரண்டாம் திருமணமா ..?? ஆனால் மாப்பிள்ளை தமிழ்நாடு இல்லை ..!! வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் ..!!

டி டி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி ஓர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் நடிகை ஆவார்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான டி டி தொடர்ந்து ஏர்டெல் சூப்பர் சிங்கர் ,காபி வித் டிடி ,அன்புடன் டிடி , என்கிட்ட மோதாதே போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார்.

குறிப்பாக விஜய் தொலைக்காட்சியின் செல்லப் பிள்ளையாக இருந்து வந்தார் டிடி.  இப்படி சின்னத்திரையில் கலக்கி கொண்டு வந்த டிடி வெள்ளித்திரையில் வெளியான பவர் பாண்டி, சர்வம் தாள மையம் ,காபி வித் காதல் ,துருவ நட்சத்திரம் போன்ற பல திரைப்படங்களில்,

நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார் டிடி . ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை வெறும் மூன்று வருடங்கள் மட்டுமே நீடித்தது.  இதன் பிறகு,

இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.  இப்படி இருக்கும் நிலையில் தற்போது 38 வயதாகும் டிடிக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடக்க உள்ளதாம் . அந்த வகையில் கேரளாவை சேர்ந்த இவர்களுடைய குடும்ப நண்பர் ஒருவரை தான் டிடி இரண்டாம் திருமணம் ,

செய்யப் போகிறாராம்.  மேலும் தங்களுடைய குடும்பத்திற்கு அந்த நபர் பல வருடங்களாக தெரிந்தவர் என்பதால் டிடி இந்த கல்யாணத்திற்கு சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.  இதனால் விரைவில் இது குறித்த தகவலை டிடி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *