May 3, 2024

200 படங்களுக்கு மேல் நடித்தும் ..!! விஜய் , அஜித் கூட நடிக்க முடியல ..!! புலம்பித்தள்ளும் 58 வயது நடிகை ..!!

80 ,  90 களில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கிக்கொண்டு வந்தவர் தான் நடிகை ராதா.  நடிகை அம்பிகாவின் தங்கையான ராதா கடந்த 1981 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது  என்று தான் சொல்ல வேண்டும் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து டிக் டிக் டிக் , கோபுரங்கள் சாய்வதில்லை ,தூங்காதே தம்பி தூங்காதே ,பாயும் புலி ,ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, அம்மன் கோவில் கிழக்காலே , ராஜாதி ராஜா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தனக்கென ஒரு தனி இடத்தை,

பிடித்துக் கொண்டார்  நடிகை ராதா . மேலும் நடிகை ராதா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இன்னும் சொல்ல போனால் நடிக்க வந்த குறிப்பிட்ட காலகட்டத்திலேயே ,

200  படங்களுக்கு மேல் நடித்து அசத்தி இருந்தார் நடிகை ராதா . ஆனால் திருமணத்துக்கு பிறகு நடிப்பதையே நிறுத்திவிட்டார் . குறிப்பாக சிவாஜி ,ரஜினி ,கமல் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் கலக்கிய ராதாவுக்கு விஜய் மற்றும் அஜித் உடன் நடிப்பதற்கு ,

ஆசை இருந்ததாம் . ஆனால் அது மட்டும் நிறைவேற வில்லையாம் . இதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *