May 3, 2024

விஜய்யை தமிழ்நாட்டுக்கே தெரியும் ..!! ஆனால் , அவருடைய மகனுக்கு தமிழே தெரியாதா ..?? என்னங்க சொல்லுறீங்க ..!! ஷாக்கில் ரசிகர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கிவரும் பிரபல டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் விஜய் . சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் தளபதி 68 என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் விஜய்.  மேலும் நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகன் இருக்கிறார்.

இவர் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் நடனம் ஆடி இருப்பார் . மேலும் வெளிநாட்டில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்த ஜேசன் சஞ்சய் அங்கு இருக்கும்போதே குறும்படங்களை இயக்கி கொண்டிருந்தார் .  இதை அடுத்து மீண்டும்,

தமிழ்நாடு திரும்பிய ஜேசன் சஞ்சய் தற்போது புதிய படம் ஒன்றை எடுக்க உள்ளாராம்.  அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது . இந்த படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது . விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று ,

எதிர்பார்க்கப்படுகிறது . ஆனால் நடிகர்  விஜய்யின் மகனுக்கு தமிழ் தெரியாது என்ற தகவல் தற்போது ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது . அந்த வகையில் விஜய்யின் மகனுக்கு தமிழ் எழுத , படிக்க வராதாம்.  அதனால் அந்தப் படத்தின் கதையை முழுக்க முழுக்க,

ஆங்கிலத்திலேயே எழுதியிருக்கிறாராம்.  அதனால் தற்போது அதை தமிழில் ஒருவர் மொழிபெயர்த்து கொண்டிருக்கிறாராம். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *