April 30, 2024

1000 கோடி வசூலுக்கு அடிபோடும் சூர்யா ..!! கங்குவா வில்லன் யார் தெரியுமா ..?? புகைப்படத்தை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் சத்தமே இல்லாமல் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் திசா பட்டாணி ,நட்டி நட்ராஜ் ,ஜெகபதிபாபு ,யோகி பாபு , ரெடின் கிங்ஸ்லி ,கோவை சரளா ,ஆனந்தராஜ், மாரிமுத்து ,தீபா வெங்கட் , ரவி ராகவேந்திரா , கே எஸ் ரவிக்குமார் , அவினாஷ் போன்ற பல பிரபலங்கள்,

நடித்து வருகின்றனர் . கே ஈ ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கிட்டத்தட்ட  300 லிருந்து 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தத் திரைப்படம் 15 மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியானது.

மேலும் அவ்வப்போது இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஆழ்த்தி வருகிறது . அந்த வகையில் இன்று கங்குவா படத்தின் வில்லனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.  அவர் வேறு யாருமில்லை ஹிந்தி நடிகரான பாபி தயோல் தான்.

சமீபத்தில் ரன்வீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான பாபி தயோல் கங்குவா படத்தில் வில்லனாக நடித்து வருகிறாராம் . இப்படி இருக்கும் நிலையில் இன்று  அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர் வெளியாகி ,

ரசிகர்களை மிரட்டி இருக்கிறது.  இதை பார்த்த ரசிகர்கள் அப்ப இந்த படம் 1000 கோடி வசூல் செய்வது உறுதி என்று கூறி வருகின்றனர். இதோ அந்த போஸ்டரை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *