April 29, 2024

கடவுள் அவதாரம் எடுத்த ரோபோ சங்கரின் மகள் ..!! கையெடுத்து கும்பிடும் ரசிகர்கள் ..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..!!

ரோபோ சங்கர் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார்.  ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் கலக்கி கொண்டு வந்த ரோபோ சங்கர் பின்னர் படங்களிலும் நடிக்க தொடங்கினார் . அப்படி சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரோபோ சங்கர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ,வாயை மூடி பேசவும்,  மாரி , புலி ,வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் , சிங்கம் 3 , வேலைக்காரன் ,

கலகலப்பு 2 , இரும்புத்திரை  போன்ற பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து  தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  இதனிடையே பிரியங்கா என்பவரை திருமணம் செய்து கொண்ட  நடிகர் ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற மகளும் இருக்கிறார் .

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கத்தில்  விஜய் நடிப்பில் வெளியான பிகில் என்ற படத்தின் மூலம்  நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பாகல் , விருமன் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்  இந்திரஜா . இப்படி இருக்கும் நிலையில் ,

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இந்திரஜா சங்கர் தற்போது கடவுள் அவதாரத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கையெடுத்து கும்பிட்டு வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *