May 5, 2024

அஜித்தின் யுத்தியை கையிலெடுத்த சூர்யா ..!! வெற்றிக்காக இப்படியொரு முடிவா ..?? அஜித்துக்கு கைகொடுத்தது போல சூர்யாவுக்கு கைக்கொடுக்குமா..??

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர் அஜித் எல்லா விஷயத்திலும் சென்டிமென்ட் பார்ப்பவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.  குறிப்பாக வி என்ற சென்டிமென்ட்டை   பல வருடங்களாகவே கடைப்பிடித்து வருகிறார் நடிகர் அஜித் . அப்படி இவருடைய நடிப்பில் வெளியான வீரம் ,வேதாளம் ,விவேகம்,  விஸ்வாசம் , வலிமை தற்போது உருவாகி வரும் விடாமுயற்சி என்று பல படங்களை கூறலாம் .

அது மட்டுமல்லாமல் எல்லா நடிகர்களின் திரைப்படங்களும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும்போது அஜித்தின் படம் மட்டும் வியாழக்கிழமை ரிலீஸ் ஆகும் அல்லது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் . இதையும் பல வருடமாக கடைப்பிடித்து வருகிறார் நடிகர் அஜித் .

தற்போது அஜித்தின் சென்டிமென்ட்டை சூர்யாவும் கடைபிடிக்க உள்ளாராம்.  அந்த வகையில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா என்ற படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் சூர்யா . இதைத் தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்காரா இயக்கும்,

புறநானூறு , வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் என்று இரண்டு மூன்று திரைப்படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்  நடிகர் சூர்யா . மேலும் அஜித்துக்கு வியாழக்கிழமை சென்டிமென்ட் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி வருவதால் தற்போது தன்னுடைய படங்களையும் வியாழக்கிழமை,

ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டு உள்ளாராம் நடிகர் சூர்யா. ஆனால் இது அஜித்துக்கு கைகொடுத்தது போல சூர்யாவுக்கு கைக்கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் … 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *