May 8, 2024

என்ன நண்பா ரெடியா ..?? அஜித்துக்கு போன் போட்ட விஜய் ..!! சூடுபிடிக்க போகும் விஜய்யின் அரசியல் ஆட்டம் ..!! என்ன சமாசாரம் தெரியுமா ..??

தமிழ் சினிமா உலகில் ரஜினி , கமலுக்கு பிறகு ஒரு முக்கிய பிரபலங்களாக இருந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித்.  ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.  அதுதான் இவர்கள் இருவரும் நடித்த முதலும் கடைசியமான படம் . இதன் பிறகு இருவரும் தங்களுக்குரிய பாணியில் கதைகளை தேர்வு செய்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தனர்.

என்னதான் சினிமாவில் இவர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டாலும் நிஜ வாழ்க்கையில் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர் . ஆனால் கடந்த சில வருடங்களாகவே அஜித் பொது நிகழ்ச்சியில் தலை காட்டுவதை தவிர்த்து வருகிறார் . இதனால் விஜயையும்,

அஜித்தையும் ஒன்றாக பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது.  இப்படி இருக்கும் நிலையில் விரைவில் முன்னாள் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளதாம் . இந்த விழாவுக்கு தமிழ் சினிமாவை சேர்ந்த எல்லா பிரபலங்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இதனால் இதில் அஜித் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது . அது மட்டுமல்லாமல் நடிகர் விஜய் அஜித்துக்கு போன் போட்டு இது குறித்து பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது . அப்படி மட்டும் இருவரும் சந்தித்து விட்டால் தன்னுடைய அரசியல் நகர்வு குறித்து ,

அஜித்திடம் விஜய் பேசுவார் என்றும் , தனக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்பார் என்றும் கூறப்படுகிறது.இதைப்பார்த்த விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் கொண்டாடத்தில் இருந்து வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *