April 27, 2024

தளபதி 68 ல் மூன்று ஹீரோயின்களா ..?? விஜய்யை வைத்து கேம் ஆடப்போகும் வெங்கட் பிரபு ..!! வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ..!! யாரு யாருன்னு பாருங்க ..!!

தற்போது இந்தியா முழுக்க வசூல் வேட்டை ஆடி வருகிறது நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் . இதனால் கண்டிப்பாக இந்த திரைப்படம் ஆயிரம் கோடியை தொடும் என்று கணிக்கப்படுகிறது.  இதை அடுத்து  தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய் . ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளாராம்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது . அந்த வீடியோவில் இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற விபரம் வெளியாகி உள்ளது . அந்த வகையில் இந்த படத்தில் விஜய்யுடன்,

இணைந்துள்ளார் 80,  90களில் கொடி கட்டி பறந்து வந்த நடிகர் மைக் மோகன் . இவர் மட்டுமல்லாமல் பிரபுதேவா, பிரசாந்த் ,ஜெயராம் ,யோகி பாபு, அஜ்மல் , வி டிவி கணேஷ் போன்ற பிரபலங்களும் இந்த படத்தில் நடிக்க உள்ளார்களாம்.  இப்படி தரமான நடிகர்களை தேர்வு செய்த வெங்கட் பிரபு,

விஜய்க்காக மூன்று கதாநாயகிகளையும் தேர்வு செய்து வைத்திருக்கிறார்.  அந்த வகையில் 90ஸ் ரசிகர்களின் பேவரைட் நடிகைகளான சினேகா மற்றும் லைலா இந்த படத்தில் நடிக்க உள்ளார்களாம் . அதோடு இளம் நடிகையான மீனாட்சி சவுத்ரியும் நடிக்க இருக்கிறார் .

இப்படி பல தரமான படங்களை தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபு இறக்கி உள்ளதால் இந்த படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது . இதோ தளபதி 68 படத்தின் பூஜை வீடியோவை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *