May 12, 2024

பாட்ஷா 2 எடுத்தா அவர் தான் ஹீரோவா நடிக்கணும் ..!! முன்கூட்டியே சொல்லிய சூப்பர் ஸ்டார் ..!! அப்ப இவர் தான் மாணிக் பாட்ஷாவா..??

தமிழ் சினிமா உலகில் கடந்த 1995 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பாட்ஷா.  இந்த படத்தில்  சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நக்மா ,ரகுவரன், ஜனகராஜ், தேவன், விஜயகுமார் ,ஆனந்தராஜ், சரண்ராஜ் ,சத்யபிரியா போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் . இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார் .

இப்படி வெளியான திரைப்படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது . அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாரின் திரை வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாகவும் இந்த திரைப்படம் அமைந்தது.  இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம்,

உருவாகினால் அவர்தான் மாணிக் பாட்ஷாவாக நடிக்க வேண்டும் என்று சூப்பர் ஸ்டாரே கூறியிருக்கிறாராம்.  அவர் வேறு யாருமில்லை நடிகர் அஜித் தான் . அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இந்த படத்தின் இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணா கூறியதாவது ,

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்வி இருந்ததாம்.  அதற்கு அஜித்தான் கனகச்சிதமாக பொருந்துவார் என்று இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் ரஜினியே கூறியிருந்தாராம் . ஆனால் இந்தத் திரைப்படம் உருவாகுமா?

அதில் அஜித் நடிப்பாரா என்பது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது.ஆனால் இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் டான பில்லா படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்த நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *