April 26, 2024

எனக்கு 73 உனக்கு 39 ..!! சூப்பர் ஸ்டாருடன் இணைந்த திருமணமான நடிகை ..!! எதிர்பார்ப்பை எகிற வைத்த கூட்டணி ..!!

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜெய் பீம் பட இயக்குனராக டி ஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் என்ற படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் . இந்த படத்தை முடித்த கையோடு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தலைவர் 171 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இதை முடித்த கையோடு மீண்டும் இயக்குனர் நெல்சன் உடன் கூட்டணி,

அமைக்க உள்ளாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . அந்த வகையில் ரஜினி- நெல்சன் கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.  இந்த படத்தின் முதல் பாகத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.

இதை அடுத்து இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாம் . இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக திருமணமான நடிகை ஒருவர் நடிக்க உள்ளாராம் . அவர் வேறு யாரும் இல்லை நடிகை நயன்தாரா தான்.  ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சந்திரமுகி ,

சிவாஜி ,குசேலன், தர்பார் ,அண்ணாத்த போன்ற ஐந்து படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை நயன்தாரா.  இதை தொடர்ந்து  இந்த படத்தில் ஆறாவது முறையாக இருவரும் இணையுள்ளதால் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது . அது மட்டுமல்லாமல் ,

இயக்குனர் நெல்சன் இயக்கிய முதல் படத்திலும் கதாநாயகியாக  நடித்திருந்தது நடிகை நயன்தாரா தான் என்பது குறிப்பிடத்தக்கது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *