May 3, 2024

காக்கி சட்டைக்கு பொருத்தமான ஒரே நடிகர் கேப்டன் மட்டும் தான் ..!! அடேங்கப்பா இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா ..?? வெளிவந்த புகைப்படங்கள் ..!!

ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம் என்று பிரபலங்களும் ரசிகர்களும் சோகத்தில் இருந்து வருகின்றனர். மேலும் கேப்டன் விஜயகாந்தின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இப்படி இருக்கும் நிலையில் இவர் இறந்ததற்குப் பிறகு இவர் செய்த ஒவ்வொரு செயலும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறது . மேலும் தமிழ் சினிமா உலகில் எத்தனையோ நடிகர்கள் ,

போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடித்திருந்தார்கள்.  ஆனால் அந்த காக்கி சட்டைக்கு பொருத்தமான ஒரு நடிகர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் மட்டும்தான் . காரணம் தமிழ் சினிமாவிலேயே 20க்கும் மேற்பட்ட படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்து சாதனை படைத்திருக்கிறார்,

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . அந்த வகையில் ஊமை விழிகள், மாநகர காவல், தர்மம் வெல்லும், கேப்டன் பிரபாகரன், சேதுபதி ஐபிஎஸ், வீரம் விளைஞ்ச மண்ணு ,தாய்மொழி, சத்ரியன் ,ஆனஸ்ட்ராஜ் ,வல்லரசு, வாஞ்சிநாதன், விருதகிரி போன்ற படங்களில் ,

காக்கி சட்டையில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் விஜயகாந்த் . இப்படி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *