April 30, 2024

” மயில் போல பொண்ணு ஒன்னு “..!! அன்பு மகளின் இறுதி சடங்கில் இளையராஜா பாடிய பாடல் ..!! பார்ப்போரை கண்கலங்க வைக்கும் வீடியோ ..!!

இசைஞானி இளையராஜாவின் இரண்டாவது வாரிசு தான் மறைந்த பின்னணி பாடகி பவதாரணி.  சிறுவயதிலிருந்தே அப்பாவின் இசையையும் , பாட்டையும் கேட்டு வளர்ந்த பவதாரணி கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான ராசையா என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார் . இப்படி இவர் பாடிய முதல் பாடலே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இரட்டை ரோஜா ,

கருவேலம் பூக்கள், அலெக்சாண்டர், மாணிக்கம் ,அரவிந்தன், உல்லாசம், ராமன் அப்துல்லா ,காதலுக்கு மரியாதை, நேருக்கு நேர் ,காதலா காதலா, செந்தூரம், காதல் கவிதை ,மனம் விரும்புதே உன்னை,  பூவெல்லாம் கேட்டுப்பார், பாரதி, தீனா ,வாஞ்சிநாதன் ,அழகி போன்ற பல திரைப்படங்களில்,

இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருந்தார் பவதாரணி . குறிப்பாக பாரதி படத்தில் இடம் பெற்ற “மயில் போல பொண்ணு ஒன்னு ” என்ற பாடலுக்காக தேசிய விருதையும் என்றார் பவதாரணி.  இப்படி தமிழ் சினிமா உலகில் ஒரு தனித்துவமான பாடகியாக இருந்து வந்த பவதாரணி,

கடைசியாக மாமனிதன் படத்தில் இடம் பெற்ற பாடலை பாடியிருந்தார்.  இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரணி இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார் . இப்படி இருந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் பவதாரணி . இவருடைய உடல் நேற்று ,

இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணையபுரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  அப்போது மகளுக்காக “மயில் போல பொண்ணு ஒன்னு “என்ற பாடலை பாடி அங்கு இருந்தவர்களை கண்கலங்க வைத்திருந்தார் இளையராஜா . இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *