May 2, 2024

சூப்பர் ஸ்டாரையே சீண்டி பார்த்த லோகேஷின் கூட்டாளி ..!! சாமியே கம்முன்னு இருக்கு பூசாரிக்கு என்ன வந்துச்சு ..?? கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள் ..!!

லியோ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் லியோ படத்தில் நடித்த எல்லா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.  மேலும் சில மாதங்களுக்கு நடந்த ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காக்கா கழுகு கதை சொல்லி விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி இருந்தார் சூப்பர் ஸ்டார் . இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழாவில்,

இதற்கு விஜய் சரியான பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில்,  ஒரே சூப்பர் ஸ்டார்னா அது ரஜினி மட்டும் தான் என்று எல்லா சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தார் விஜய்  . இப்படி விஜய்யே அமைதியாக இருக்கும்போது அவருடைய வலது கரம் ஓவராக ஆடி உள்ளது.

அவர் வேறு யாருமில்லை இயக்குனர் ரத்னகுமார் தான்.  கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ரத்னகுமார் தொடர்ந்து ஆடை,  குலு குலு போன்ற படங்களை இயக்கியிருந்தார்.  அது மட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ்,

இயக்கத்தில் உருவான மாஸ்டர் ,விக்ரம்,  லியோ போன்ற படங்களில் துணை எழுத்தாளராகவும் பணியாற்றி இருந்தார் ரத்னகுமார் . மேலும் லியோ வெற்றி விழாவில் பேசிய ரத்னகுமார் , என்னதான் கழுகு உயரப் பறந்தாலும் பசிச்சா கீழ வந்து தான் ஆகணும் என்று ரஜினியை,

மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார் . இதற்கும் அடுத்ததாக ரஜினி படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளார்  இதனால் இந்த படத்தில் இவருக்கு துணை எழுத்தாளராக பணிபுரிய வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *