May 7, 2024

லியோ படத்தில் பிக்பாஸ் ஜனனியும் நடிச்சிருக்காரா ..?? கமல் தான் சிபாரிசு செய்தாரா ..?? சஸ்பென்ஸை உடைத்த புகைப்படம் ..!!

தற்போது விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பது லியோ படத்திற்காக தான்.  அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ.  ஏற்கனவே மாஸ்டர் என்ற படத்தில் ஒன்றாக பணிபுரிந்திருந்த விஜய் – லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைந்துள்ளனர் .

அப்படி இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத் ,அர்ஜுன் ,கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் ,மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ் ,சாண்டி மாஸ்டர் ,பாபு ஆண்டனி போன்ற பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் . எஸ் எஸ் லலித்குமார் தயாரிப்பில்,

உருவான இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.  இந்த திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.  இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளரான ஜனனி லியோ படத்தில் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது .

அந்த வகையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதே பிக்பாஸ் ஜனனி இந்த படத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்பட்டு வந்த  நிலையில் அதை உறுதி செய்யும் வகையில் நேற்று வெளியான லியோ படத்தின் பாடலில் பிக்பாஸ்  ஜனனி இடம்பெற்று இருக்கிறார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் அட,  நம்ம பிக் பாஸ் ஜனனியும் லியோ படத்தில் நடித்துள்ளாரா என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *