April 22, 2024

இந்த ஒரு காரணத்தினால் தான் ..!! நானும் இன்னும் கல்யாணமே பண்ணிக்கல ..!! 43 வயதில் வெளிப்படையாக சொல்லிய மும்தாஜ்..!!

மும்தாஜ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட கவர்ச்சி நடிகை ஆவார் . கடந்த 1999 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மும்தாஜ்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த மும்தாஜ் பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மலபார் போலீஸ் ,குஷி ,பட்ஜெட் பத்மநாபன் ,லூட்டி ,

சொன்னால்தான் காதலா ,சாக்லேட் ,ரோஜா கூட்டம் , ஏழுமலை , குத்து  போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  . குறிப்பாக அப்போது இவர் பல தமிழ் திரைப்படங்களில் இடம் பெற்ற ஐட்டம் பாடல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும் .

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி இருக்கும் நிலையில்  கடந்த எட்டு வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கும் மும்தாஜ் 43 வயது ஆகியும்,

இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மும்தாஜ் , எனக்கு திருமணம் நடக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணமே எனக்கு அந்த யோசனையே இல்லாமல் இருப்பது தான் . எத்தனையோ மாப்பிள்ளைகள்,

என்னைப் பெண் பார்க்க வந்தார்கள் . ஆனால் எனக்கு திருமணம் செய்து கொள்ளும் யோசனையே சுத்தமாக இல்லை.  அதனால் தான் நான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார் நடிகை மும்தாஜ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *