April 27, 2024

பிரியங்கா மோகன் இவ்வளவு மோசமா நடிச்சிருக்காரா ..?? பல வருடங்கள் கழித்து வெளியாகும் முதல் படம் ..!! ட்ரைலரை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் ..!!

பிரியங்கா மோகன் ஓர் தவிர்க்க முடியாத தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். கன்னட படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய பிரியங்கா மோகன் ரசிகர்களிடையே  பெரிய அளவில் பிரபலமானது நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் தான் . இதன் பிறகு தான் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் .

இந்த திரைப்படம் இவரை தமிழ் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாக்கியது.  இதன் பிறகு தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வந்த பிரியங்கா மோகன் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான்,

போன்ற படங்களில் நடித்திருந்தார் . இதையடுத்து தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் , ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பிரதர் போன்ற படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார் மோகன் . மேலும் படங்களில் கொஞ்சம் கூட கவர்ச்சி காட்டாமல்,

நடித்துக்கொண்டு வரும் பிரியங்கா மோகன் நடித்த முதல் திரைப்படம் டாக்டர் கிடையாதாம் . அந்த வகையில் அவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் டிக் டாக் . குறிப்பாக இந்த படத்தில் பெட்ரூம் காட்சி ,நெருக்கமான காட்சி ,கவர்ச்சியான காட்சிகளில் நடித்திருக்கிறார் பிரியங்கா மோகன்.

ஆனால் இந்த திரைப்படம் பல வருடங்களாக வெளியாகாமல் இருந்து வந்தது . இதை அடுத்து இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாம் . இந்த படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா மோகன் இவ்வளவு மோசமா நடித்திருக்கிறாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *