May 2, 2024

ராஜராஜ சோழனாக மாறிய அஜித்தின் ஏஐ புகைப்படங்கள் ..!! இது மட்டும் நடந்துச்சுன்னா எப்படி இருக்கும்..??

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்குமார்.  அமராவதி என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்படத்தை தொடங்கிய அஜித் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் . மேலும் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்தது . இதை அடுத்து தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி  இயக்கத்தில்,

உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் அஜித்.  மேலும் இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் நடிகர் அஜித் இன்னும் வரலாற்று கதை களத்தில் இன்னும் நடித்ததே கிடையாது .  இந்நிலையில் அஜித்தை வைத்து பில்லா , ஆரம்பம் போன்ற,

சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்த இயக்குனர் விஷ்ணுவர்தன் ராஜ ராஜ சோழனின் வரலாற்று கதைக்களத்தை அஜித்தை வைத்து எடுப்பதற்கு திட்டமிட்டு இருந்தாராம் . ஆனால் தற்போது இருவருமே பிசியாக உள்ளதால் அந்த படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லயாம் .

இப்படி இருக்கும் நிலையில் ராஜராஜ சோழனாக மாறிய அஜித்தின் ஏஐ புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் இது மட்டும் நடந்துச்சுன்னா எப்படி இருக்கும் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *