May 2, 2024

நான் தான் முதலில் சந்திரமுகியாக நடிக்க இருந்தேன்..!! இப்போது புலம்பும் பிரபல நடிகை ..!! நல்ல வேலை நீங்க நடிக்கல ..!!

தமிழ் சினிமாவிலேயே அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்றால் அது சந்திரமுகி திரைப்படம் தான் . கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி.  இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, வடிவேலு, நாசர், பிரபு, ஜோதிகா , விஜயகுமார் , சோனு சூட் , வினீத் , மாளவிகா போன்ற பல நடிகர் , நடிகைகள் நடித்திருந்தனர் .

சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்திருந்தார் . இப்படி வெளியான திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றிப்படமாக அமைந்தது . அதுமட்டுமில்லாமல் வசூலிலும் பிரம்மாண்ட சாதனை படைத்தது .

குறிப்பாக இந்த படத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு என்று தான் சொல்ல வேண்டும்.  ஆனால் நடிப்பில் பிச்சு உதறிய ஜோதிகா நடித்த சந்திரமுகி  கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்ததது வேறொரு நடிகை தானாம்.  அவர் வேறு யாருமில்லை,

நடிகை சினேகா தான்.  அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சினேகாவிடம் நீங்கள் தவறவிட்ட நல்ல படம் எது என்று கேள்வி எழுப்புள்ளனர் .அதற்கு,  நான் தான் முதலில் சந்திரமுகியாக நடிக்க இருந்தேன்.  ஒரு சில காரணங்களால் அந்த படத்தை ,

தவற விட்டுவிட்டேன் என்று கூறியிருந்தார் நடிகை சினேகா  .  இதை பார்த்த ரசிகர்கள் நல்ல வேலை நீங்க நடிக்கல என்று கூறி வருகின்றனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *