April 29, 2024

பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய நடிகை காயத்ரி ரகுராம் ..!! என்ன காரணம் தெரியுமா ..??

காயத்ரி ரகுராம் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை, நடன கலைஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார் . நடனக் கலைஞரான ரகுராமின் மகளான காயத்ரி ரகுராம் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஸ்டைல், பரசுராம் ,விசில் ,வானம், வை ராஜா வை, தாரை தப்பட்டை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் ,

நடிகை காயத்ரி ரகுராம் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்தார்,

நடிகை காயத்ரி ரகுராம்.  கிட்டத்தட்ட எட்டு வருடமாக பாஜக கட்சியில் இருந்த காயத்ரி ரகுராம் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டியிருந்தார் . அது மட்டுமல்லாமல் ஒரு முக்கியமான வீடியோவையும் நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டதாக ,

கூறப்படுகிறது . இதனால் பாஜக கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார் நடிகை  காயத்ரி ரகுராம்.  இப்படி இருக்கும் நிலையில் இன்று அதிமுக கட்சியின் கழகப் பொதுச் செயலாளரும் ,  முன்னாள் தமிழ்நாட்டில் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்களின்,

முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார் நடிகை காயத்ரி ரகுராம் . அந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *