May 18, 2024

ஓவர் நைட்டில் பணக்காரனான “பிக்பாஸ்” பிரதீப் ..!! பிக்பாஸ் கைவிட்டாலும் இது கை விடாது ..!! வாழ்த்து சொல்லும் ரசிகர்கள் ..!!

பிரதீப் ஆண்டனி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அருவி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் பிரதீப் ஆண்டனி.  பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான பால் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது . பின்னர் இந்த  படத்தை தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தில்,

ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இப்படி இருந்த நிலையில் சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார் பிரதீப் . மேலும் ஆரம்பத்தில் இருந்தே இவரை சக போட்டியாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.  ஆனால் பிக் பாஸ் வீட்டில்,

சரியாக இருந்த போட்டியாளர் என்றால் அது பிரதீப் ஆண்டனி தான் . இதன் பிறகு ஒரு கட்டத்தில் பெண்களுக்கு சுத்தமாக பாதுகாப்பு இல்லை என்று சொல்லி பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து அதிரடியாக வெளியேற்றினார் கமல்ஹாசன்.  இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் கைவிட்டாலும் ,

சினிமா கைவிடாது என்ற என்ன செய்தியை ரசிகர்களுக்கு கூறியுள்ளார் பிரதீப் ஆண்டனி . அதில், இந்த வருஷம் நடிச்சு கொஞ்சம் காசு சம்பாதிக்கலாமுன்னு  அட்வான்ஸ் எல்லாம் வாங்கிட்டேன் ,படம் பொறுமையா தான் வரும் ,எப்ப வரும் லாம் கேட்காதீங்க ,வரும்போது ,

முடிஞ்சா தியேட்டர்ல பாருங்க ,அன்புக்கு நன்றி என்று பகிர்ந்து இருந்தார்.  அந்தப் பதிவில் ஒன்பது லட்சம் மதிப்புள்ள செக் ஒன்றையும் நினைத்திருந்தார் பிரதீப் ஆண்டனி.  இதைப் பார்த்த ரசிகர்கள் பிரதீப் ஆண்டனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *