April 25, 2024

என்னால அதை பண்ண முடியல ..!! என்ன மன்னிச்சிடுங்க அண்ணா..!! கேப்டனின் மறைவால் கதறி கதறி அழுத விஷால் ..!!

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திடீர் மரணம் திரை பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . குறிப்பாக தற்போதுள்ள பல சினிமா பிரபலங்களுக்கு எதையும் யோசிக்காமல் உதவி செய்திருந்தார் விஜயகாந்த் இ. தனாலேயே இவருடைய இறப்பை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஷால் விஜயகாந்தின் இறப்பை தாங்க முடியாமல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ,அண்ணே என்ன மன்னிச்சிடுங்க , இப்ப நான் உங்க கூட இருந்திருக்கணும் , ஆனா என்னால வர முடியல .நடிகர் சங்க விஷயத்துல எனக்கு நீங்கதான் எப்போதும் ஒரு ரோல் மாடல் . உங்களைப் பற்றி பல விஷயங்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.  அப்படித்தான் நானும் இருக்க வேண்டும் என்று,

நினைத்திருக்கிறேன்.  உங்களுடைய காலை தொட்டு கும்பிட வேண்டும் என்று நினைக்கிறேன்,  உங்களுடைய ஆத்மா சாந்தியடையட்டும் என்று கூறியிருந்தார் . மேலும் நடிகர் விஷால் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *