April 28, 2024

மகன் , மகள் , மனைவியுடன் யோகிபாபு ..!! முதல் முறையாக வெளியான குடும்ப புகைப்படம் ..!! கண்ணு பட்டுற போகுது சுத்தி போட சொல்லுங்க..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் பிசியான காமெடி நடிகராக கலந்து கொண்டு வருபவர் நடிகர் யோகி பாபு . கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான யோகி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் பாபு . இதன் பிறகு தான் யோகி பாபு என்று அழைக்கப்பட்டார்.  பின்னர் தொடர்ச்சியாக சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த யோகி பாபு யாமிருக்க பயமே, மான் கராத்தே , காக்கி சட்டை ,ஆண்டவன் கட்டளை,

ரெமோ போன்ற பல படங்களின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் . இதன் பிறகு தான் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்  நடிகர் யோகி பாபு . இப்படி காமெடி நடிகராக கலக்கி கொண்டு வந்த யோகி பாபு ஹீரோவாக கோலமாவு கோகிலா ,தர்ம பிரபு ,

கூர்கா, ஜாம்பி,  மண்டேலா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .  குறிப்பாக வருடத்திற்கு 20 படங்களுக்கு மேல் நடித்து அசத்தி வருகிறார் நடிகர்  யோகி பாபு . இதனிடையே கடந்த 2020 ம் ஆண்டு  மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் ,

செய்து கொண்டார் நடிகர் யோகி பாபு. திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில் மகள் ,மகன் மற்றும் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முதல்முறையாக பதிவிட்டுள்ளார்  நடிகர் யோகி பாபு . அந்த புகைப்படம் ,

தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் கண்ணு பட்டுற போகுது சுத்தி போட சொல்லுங்க என்று கூறி வருகின்றனர்.இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *