April 26, 2024

“சார்பட்டா பரம்பரை” மாரியம்மாவுக்கு அடித்த யோகம் ..!! இந்த டாப் நடிகருடன் நடிக்கப்போகிறாரா ..?? கனவுல கூட நினைச்சு பார்த்திருக்க மாட்டார் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை . இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை துஷாரா விஜயன் . இப்படி வெளியான படத்தின்  மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன்னுடைய நடிப்பால் கவர்ந்து விட்டார் ,

நடிகை துஷாரா விஜயன் . ஆனால் இவர் இந்த படத்திற்கு முன்பே வெளியான போதை ஏறி புத்தி மாறி  என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக  அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அன்புள்ள கில்லி ,நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன் , அநீதி,

போன்ற படங்களில் நடித்திருந்தார்  நடிகை துஷாரா  விஜயன் . இப்படி இருக்கும் நிலையில் தற்போது டாப் நடிகருடன் இணையப் போகிறாராம் நடிகை துஷாரா  விஜயன் . அவர் வேறு யாருமில்லை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் . அந்த வகையில் ஜெய் பீம் பட இயக்குனரான,

டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  இந்தப் படத்தில் நடிகை துஷாரா  விஜயனும் இணைந்துள்ளாராம்.  இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகி உள்ளது.  மேலும் நடிகை துஷாரா விஜயன் ,

கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் சூப்பர் ஸ்டார் உடன் நடிப்பார் என்று , இருந்தாலும் இந்த படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்படலாம் என்றும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *