April 28, 2024

பிக்பாஸ் வீட்டுக்குள் நிஜ காதலர்களா..?? டி ஆர் பிக்காக இறக்கிவிட்ட உலகநாயகன் ..!! யாரு யாருன்னு நீங்களே பாருங்க ..!!

நேற்று பிக் பாஸ் சீசன் 7 கோலாகலமாக தொடங்கப்பட்டது.  எப்போதும் போல இந்த நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார் . அப்படி இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் . அந்த வகையில் கூல் சுரேஷ் ,ரவீனா தாஹா ,பிரதீப் ஆண்டனி ,பூர்ணிமா ரவி ,மணி சந்திரா ,ஜோவிகா விஜயகுமார் ,சரவணன் விக்ரம் ,

செல்லத்துரை போன்ற 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் களமிறங்கியுள்ளனர் . பொதுவாகவே ஒவ்வொரு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில போட்டியாளர்களுக்கு இடையே காதல் மலரும் . ஆனால் இந்த முறை நிஜ காதலர்களையே களத்தில் இறக்கி விட்டுள்ளாராம் கமல்ஹாசன்.

அவர்கள் வேறு யாரும் இல்லை ரவீனா தாஹா மற்றும் மணிசந்திரா தான். தமிழில் வெளியான ஜில்லா , புலி , ராட்சசன் , பேய்கள் ஜாக்கிரதை , நாகேஷ் திரையரங்கம் போன்ற பல படங்களில் நடித்து இருந்த ரவீனா விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மௌன ராகம் 2  சீரியலில்,

நடித்து பிரபலமானார் . இவரை போலவே மணி சந்திராவும் விஜய் தொலைகாட்சியின் மூலம் தான் பிரபலமானார் . மேலும் இவர் ஒரு  பிரபலமான நடன கலைஞர் ஆவார் . குறிப்பாக பிக் பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன்பே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது .

அதோடு  இவர்கள் இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு சுற்றுலாவும்  சென்றுள்ளனர் தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *